About Us
REG NO: 2/2022
பெரிய வடவூர் அருள்மிகு ஶ்ரீ மாரியம்மன் கோவில் திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு
இந்த கோவில் திருச்சியில் உள்ள மாரியம்மன் கோவில்களுள் மிகவும் புகழ் பெற்ற கோவில் வடவூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் .சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு, கிராம மக்கள் மஞ்சள் கொல்லையில் இருந்து மகமாயி சிலையை எடுத்து சுயமாக தோன்றிய வேப்ப மரத்தின் அடியில் வைத்துஅம்மனை வழிபட்டு வந்தனர் காலப்போக்கில் கிராம மக்கள் ஒன்று கூடி அம்மனுக்கு கருங்கல்லில் மேல் தளம் அமைத்து கோவில் கட்டி முடித்தனர்.
Periya Vadavoor Arulmiku Sri Mariamman Thirukoil, Thillainagar, Tiruchirappalli Tamil Nadu.
This is the most famous of the Trichy Mariamman temples. Vadavoor Sri Mariamman Temple About 250 years ago, the villagers took the Mahamayi idol from Yellowkolai and placed it under a neem tree that had sprung up by itself.
தல மகிமை - Temple glory
மனம் வருந்தி ….. கேட்கும் பக்தர்களுக்கு மனம் மகிழ்ச்சியாய் வரம் அளிப்பவள் நோய் பிணி தீர்ப்பவள் ,தடையைநீக்கி, சுப வாழ்க்கையை அளிப்பவள்.
She gives boons to the devotees who repent and ask for boons with joy.She is the solver of disease, remover of marriage obstacles, giver of good life, giver of education, child welfare, business, employment opportunities.
மூலவர் - Main Deity:
மாரியம்மன் , பாலக்காட்டு அம்மன், செங்குளத்து கருப்பு சாமி, மதுரை வீரன், விநாயகர், செல்வமுருகன் மற்றும் உற்சவ அம்மன் கோவிலில் மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
People are worshiping at Mariamman, Palakkadtu Amman, Sengulathu Karupu Sami, Madurai Veeran, Vinayagar Selvamurugan and Utsava Amman temple. All day pujas are held Ammavasai, Full Moon, Karthikai, Aadi Pooram, Bangle decoration puja, Aadi 18,aadi 28 , Kuthuvilaku special pujas are held.
திருவிழாக்கள் - Festivals
அனைத்து நாள்களிலும் பூஜைகள் நடைபெறும் அம்மாவாசை பௌர்ணமி கார்த்திகை ஆடிப் பூரம் வளையல் அலங்கார பூஜை ஆடி 18 ஆடி 28 குத்துவிளக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் இரண்டாம் வாரம் காவேரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்து அம்மனுக்கு காப்பு கட்டி 15 நாட்கள் விரதம் இருந்து நான்கு நாட்கள் திருவிழாவாக மிக சிறப்பாக கொண்டாடப்படும் பதினைந்தாவது நாளில் அம்மனுக்கு பூச்சொரிதல் விழா.
Every year, on the second week of the month of Chitrai, holy water is brought from the Kaveri river and the goddess is kept in a shelter, followed by a 15-day fast and a four-day festival. On the fifteenth day the ceremony of sprinkling flowers to the Goddess
முதல் நாள் - 1st Day of Festival
அய்யாளம்மன் படித்துறையில் புனித நீர் எடுத்து கரகம் பாளித்து, மாரியம்மன் கரகம், பாலக்காட்டு அம்மன் கரகம், செங்குளத்து கருப்பு, அலங்கரித்து, குதிரை வாகனத்தில் அம்மன் பூ அலங்காரம் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வான வேடிக்கை, தப்பாட்டம், தாரை தப்பட்டை முழங்க கரகாட்டம், சிலம்பாட்டம், பால்குடம், முளைப்பாரி மற்றும் அக்னி சட்டி ஏந்திய பக்தர்கள் அண்ணாசாலை தெப்பக்குளம் தென்னூர் தில்லை நகர் வழியாக வடவூர் தெருகளில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்கள் அருள் புரிவார்
Devotees carrying holy water at Ayyalamman Padithura, Mariamman Karakam, Palakkadtu Amman Karakam, decorated with horse carriage decorated with Amman flowers and electric lamps, Vaana fun, Tappatam, Tarai, Thampai Muzhanga Karakatam, Silampattam, palkudam, Mulaipari and Agni satti Annasalai – Theppakulam – Tennur – There is Amman Veedhi in three streets in Vadavoor through Thillai Nagar and devotees come and get blessings.
இரண்டாம் நாள் - 2nd Day of Festival
கோவிலின் உற்சவ அம்மன் தேர், பூ மற்றும் மின் அலங்காரத்தில் உடன் மாரியம்மன் கரகம் சாமி பாலக்காட்டு அம்மன் கரகம் சாமி மற்றும் மருளாளியுடன் வீடு தோறும் மாவிளக்கு பூஜை தேங்காய் உடைத்தும் அருள் ஆசி பெறுவர் அன்று வெள்ளை வேட்டி கட்டி பச்சை மூங்கில் மற்றும் கரும்பு கரும்பில் அலங்கரித்து செங்குளத்து கருப்பு, மருளாளியாக குட்டி குடித்தல் மற்றும் அருள் வாக்கு சொல்லுதல், பாலக்காட்டு அம்மன் பச்சை பட்டு சேலை உடுத்தி அருள்வாக்கு சொல்லுதல் நிகழ்ச்சி நடைபெறும்.
The festival goddess of the temple is decorated with flowers and electricity in a cart along with Mariamman Karagam Sami ,Palakkadtu Goddess Karagam Sami and Marulali with Mavilakku Pooja breaking coconuts from house to house and get blessings. A saree-wearing ceremony will be held.
மூன்றாம் நாள் - 3rd Day of Festival
மஞ்சள் நீராட்டு விழா உற்சவ அம்மன் உடன் கரகம் சாமிகள் மற்றும் மஞ்சள் நீராடி அம்மன் அருள் பெறுவர் சாலை ரோடு கல் மந்தைஇல் சாமி கலைக்கப்படும் நிகழ்ச்சி நடைபெறும் அதன் பின்பு குதிரை வாகனத்தில் தயிர்சாதம் கருவாடு படைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள்.
Turmeric Bathing Festival Karakam Samis with Utsava Amman and Marulali along with Turmeric Bathing Goddess will get the blessings of Saali Road Kal Manthai Kal Manthai.
நான்காம் நாள் - 4th day of Festival
பாலக்காட்டை மாரியம்மன் கோழி எடுத்து சாமி கும்பிட்டு அம்மனுக்கு படைத்து, கொதிக்கும் குழம்பில் கையை விட்டு அம்மனுக்கு படைத்து பின்பு குறி சொல்லும் பாலக்காட்டை மாரியம்மன் பின்பு மாபெரும் அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெறும்.
Padayal with chicken curry is prepared by the worshipers by hand dipping it in the gravy of Palakkad Amman.
தாங்கள் விருப்பப்படும் நன்கொடையை செலுத்தவும்.
Donation as to wish.