Anna Dhanam Donation Details
தானத்தில் சிறந்தது ‘அன்னதானம்’
இறைக்க இறைக்கத்தான் கிணற்றில் நீர் ஊரும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். நாம் கற்ற கல்வியை பிறருக்கு சொல்லிக்கொடுத்தால் நம்முடைய அறிவு விருத்தி அடையும் அதுபோல நாம் சில பொருட்களை தானமாக கொடுத்தால் நம்முடைய செல்வம் விருத்தி அடையும். தானம் கொடுப்பவர்களை இறைவனுக்கு மிகவும் பிடிக்குமாம் எனவேதான் தானம் செய்பவர்களின் வீட்டில் செல்வம் மேலும் மேலும் பெருகுகிறது.
கோவிலில் சமைக்கப்படும் உணவுப் பொருட்கள், அரிசி, பருப்பு போன்றவற்றை தானமாக மாதம் தோறும் நீங்கள் உங்களால் முடிந்த அளவிற்கு உதவி செய்து வந்தால் அன்னபூரணியின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்களுடைய சந்ததியினருக்கு அடுத்தடுத்து வரும் காலங்களில் போய் சேரும் என்பது நம்பிக்கை. எந்த விதத்திலும் உங்களுக்கு வறுமை என்பதே ஏற்படாமல் பாதுகாக்க கூடிய ஒரு எளிய பரிகாரமாக இப்பரிகாரம் இருக்கும்.
உயிரோடு உடம்பை சேர்த்து வைத்து ரட்சிப்பதும் அன்னம்தான். அதனால்தான் ‘உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே” என்று சொல்லியிருக்கிறது.
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின். – என்கிறார் திருவள்ளுவர்.
அதாவது பசியை பொறுத்துக்கொண்டு தவம் செய்பவர்களின் ஆற்றலை விட அப்பசியை போக்குபவர்களின் ஆற்றல் மிகப்பெரிது என்கிறார் வள்ளுவர்.
அன்னதானம் – சகல பாக்கியங்களும் உண்டாகும்.
தானியங்களை தானம் செய்வதால் லட்சுமி மற்றும் அன்னை அன்னபூரணி இருவருக்குமே ஆசிகள் கிடைக்கும் என்பது மத நம்பிக்கை. அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.
அன்னதானத்தில்தான் ஒருவரை பூரணமாக திருப்திபடுத்த முடியும்.
தானத்தின் பலன்கள்
அன்ன தானம் | |
அன்ன தானம் | சகல பாக்கியங்களும் உண்டாகும் |
அரிசி தானம் | முன்ஜென்ம பாவங்கள் விலகும் |
பால் தானம் | துன்பங்கள் விலகும் |
நெய் தானம் | பிணிகள் நீங்கும் |
தேங்காய் தானம் | எடுத்த காரியங்களில் வெற்றிகள் கிட்டும் |
தேன் தானம் | புத்திர பாக்கியம் கிட்டும் |
பழங்கள் தானம் | மன அமைதி உண்டாகும் |
தயிர் தானம் | இந்திரிய விருத்தி உண்டாகும் |
நெல்லிக்கனி தானம் | அறிவு மேம்படும் |
கோதுமை தானம் | ரிஷிக்கடன் அகலும் |
எண்ணெய் தானம் | ஆரோக்கியம் உண்டாகும் |
காய்கறிகள் தானம் | குழந்தை ஆரோக்கியம் மேம்படும் |
மஞ்சள் தானம் | சுபிட்சம் உண்டாகும் |
எள் தானம் | சாந்தி உண்டாகும் |
வெல்ல தானம் | வம்ச விருத்தி உண்டாகும் |
தண்ணீர் தானம் | மன மகிழ்ச்சி உண்டாகும் |
சந்தன தானம் | கீர்த்தி உண்டாகும் |
தாங்கள் விருப்பப்படும் நன்கொடையை செலுத்தவும்.
Donation as to wish.
தாங்கள் விருப்பப்படும் நன்கொடையை செலுத்தவும்.
Donation as to wish.
1.ஆடை தானம்
ஏழை எளியோருக்கு புதிய சுத்தமான ஆடைகளை தானம் செய்வதால் சிறந்த பலன் கிடைக்கும். உங்கள் பணியில் வரும் தடைகள் அனைத்தும் நீங்கும்.
2. காலணி தானம்
காலணி தானம் செய்தால் முன்னோர்களின் சாபத்திலிருந்து விமோச்சனம் கிடைக்கும்.புனித யாத்திரை செய்த பலன் கிடைக்கும்.காலணி வாங்குவதற்கு கூட கஷ்டப்படும் ஏழை எளியோர்க்கு இதை வாங்கி தருவதால் சிறந்த பலன் கிடைக்கும்.
3. மாங்கல்ய சரடு தானம்
மாங்கல்ய சரடால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும். கோவில்கள், பொது இடங்கள், சுப காரியங்களில் சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய சரடு வளையல், முகம் பார்க்கும் கண்ணாடி, மஞ்சள், குங்குமம் கொடுக்கலாம்.
4. பொன் மாங்கல்யம் தானம்
மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள் ஏழை எளியோரின் திருமணதிற்கு பொன்னால் ஆன மாங்கல்யத்தை தானமாக கொடுக்கலாம். இதனால் மாங்கல்ய தோஷம் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும். மாங்கல்ய தோஷம் இருந்தால் திருமணம் ஆனவர்கள் கோயிலுக்கு வந்து மாங்கல்யத்தை செலுத்தி விடலாம்.
5. குடை தானம்
குடை தானம் செய்தால் தவறான வழியில் சேர்த்த செல்வத்தினால் ஏற்பட்ட பாவம் விலகும் . குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டாகும். பெரியவர்களை புறக்கணித்ததால் வந்த சாபங்கள் தீரும்.
6. பாய் தானம்
பாய் தானம் செய்வதால் பெரியவர்களை புறக்கணித்ததால் வந்த சாபங்கள் தீரும். கடும் நோய்களுக்கு நிவாரணம் கிட்டும் . முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவற்றில் இதை செய்யலாம்.
7. கோ தானம்
இந்து தர்மத்தில் கோ தானம் என்னும் பசு தானம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எந்த ஒரு சுப திதியிலும் பசுவை தானம் செய்வது பல பிறவிகளுக்கும் பல தலைமுறைகளுக்கும் நன்மை பயக்கும்.
8. தீப தானம்
கோவில்களில் தீபம் எண்ணெய் தானமாக அடைகின்றது. பித்ருக்களின் பாவம் நிவர்த்தியாகும் . இதன் மூலம் பித்ருக்களின் ஆசி அனுபவிக்கப்படும்.
தானங்களும் அதன் பலன்களும்
மஞ்சள் தானம் | மங்களம் உண்டாகும் |
பூமி தானம் | இகபரசுகங்கள் |
வஸ்த்ர தானம் (துணி) | சகல யோக நிவர்த்தி |
கோ தானம் (பசுமாடு) | பித்ருசாப நிவர்த்தி. இல்லத்தின் தோஷங்கள் விலகும். பலவித பூஜைகளின் பலன்கள் கிடைக்கும். |
திலதானம் (எள்ளு) | பாப விமோசனம் |
குல தானம் (வெல்லம்) | குல அபிவிருத்தி துக்கநிவர்த்தி |
நெய் தானம் | வீடுபேறு அடையலாம் தேவதா அனுக்ரஹம் |
வெள்ளி தானம் | பித்ருகள் ஆசிகிடைக்கும் |
சொர்ண தானம் (தங்கம்) | கோடிபுண்ணியம் உண்டாகும் |
கம்பளி (போர்வை) தானம் | துர்சொப்ன துர்சகுன பயநிவர்த்தி |
பழவகைகள் தானம் | புத்ரபவுத்ர அபிவிருத்தி |
பால் தானம் | சவுபாக்கியம் |
சந்தனக்கட்டை தானம் | புகழ் |
அன்னதானம் | சகலபாக்கியங்களும் உண்டாகும் |