Temple Donation
( மஞ்சள் பொடி, குங்குமம், திருநீர், திரவிய பொடி, சந்தனம், இளநீர், தேன், பன்னீர், பால், எண்ணெய், அரிசி மாவு, பஞ்சாமிர்தம், தயிர், ஏழு சுவாமிகளுக்கு மாலை, கதம்பம், உதிரி பூ )
( அம்மனுக்கு பூஜை, பொங்கல், தேங்காய், வாழைப்பழம் சீப்பு, வெற்றிலை பாக்கு, ஊதுபத்தி, சாம்பிராணி, எலுமிச்சம்பழம் )
( சர்க்கரை பொங்கல், லெமன் சாதம், புளி சாதம், தேங்காய், வாழைப்பழம் சீப்பு, வெற்றிலை பாக்கு, ஊதுபத்தி, சாம்பிராணி )
( அம்மாவாசை, பௌர்ணமி ஆகிய இரு தினங்களில் மாதந்தோறும் அன்னதானம் 150 பேர் )
(தேங்காய், வாழைப்பழம் சீப்பு, ஊதுபத்தி, சாம்பிராணி, பொரி, பொட்டுக்கடலை, சுண்டல்)
தாங்கள் விருப்பப்படும் நன்கொடையை செலுத்தவும்.
Donation as to wish.
அபிஷேகம்
ஒரு ஆலயத்தின் மூலவர் சிலை எந்த அளவுக்கு அருள் ஆற்றல் சக்தியை வெளிப்படுத்துகிறது என்பது, அந்த சிலைக்கு செய்யப்படும் அபிஷேகங்களின் அளவையும், சிறப்பையும் பொருத்தே அமையும்.
இந்த உண்மையை சங்க காலத்துக்கு முன்பே நம் மூதாதையர்கள் கண்டுபிடித்து விட்டனர். எனவே தான் ஆலயங்களில் மூலவர் சிலைக்கு அபிஷேகம் நடத்தப்படுவதற்கு அவர்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர். அதோடு அபிஷேக பொருட்கள் தடையின்றி கிடைக்க நிலங்களை கோவில்களுக்கு எழுதி வைத்தனர்.
அம்மனுக்கு வழிபாட்டின் முதல் உபசாரமாக அபிஷேகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு வகை அபிஷேகத்துக்கும் ஒவ்வொரு பலன் உண்டு
அபிஷேகம்
அன்ன தானம் | |
பூ தானம் | விரும்பிய இல்வாழ்க்கை அமையும் |
குடை தானம் | எண்ணிய எதிர்காலம் உண்டாகும் |
தங்கம் தானம் | தோஷம் நிவர்த்தியாகும் |
கம்பளி தானம் | வெண்குஸ்ட நோய்களின் அறிகுறிகள் தென்பட்டால் அதிலிருந்து மீண்டு விடலாம் |
வெள்ளி தானம் | கவலைகள் நீங்கும் |
கோ தானம் | பித்ரு கடன் நீங்கும் |
வஸ்திர தானம் | ஆயுள் விருத்தி உண்டாகும் |
தீப தானம் | முன்னோர்களின் ஆசிகள் கிட்டும் |
பூமி தானம் | பிறவா நிலை உண்டாகும் |
ஆடைகள் தானம் | சுகபோக வாழ்வு அமையும் |
காலணி தானம் | பெரியோர்களை அவமதித்த பாவம் போக்கும் |
- தண்ணீர் அபிஷேகம் – மனசாந்தி
- பஞ்சகவ்யம் – ஆத்மசுத்தி ; பாவ நிவர்த்தி
- ( பஞ்சகவ்யம் என்பது பசும்பால் ; பசுஞ்சாணம் ; கோமியம் ; பசுந்தயிர் ; பசுநெய் ஆகியவைகளை உரிய விகிதப்படி கலந்து வைப்பதாகும் இவற்றுடன் புனிதத்தை கருதி தர்ப்பையையும் போடுவது வழக்கம் )
- நல்லெண்ணெய் – பக்தி
- சந்தனாதி தைலம் – சுகம்
- அரிசிமாவுப்பொடி – மலநாசம்
- வாழைப்பழம் – பயிர் விருத்தி
- மாம்பழம் – சகல வசியம்
- பலாப்பழம் – உலக வசியம்
- திராட்சை பழம் – பயம் நீங்குதல்
- மாதுளம் பழம் – பகை நீங்குதல்
- தம்பரத்தம் பழம் – பூமி லாபம்
- நாரத்தம் பழம் – நல்ல புத்தி
- தேங்காய் துருவல் – அரசுரிமை
- சர்க்கரை – பகை அழிதல்
- பஞ்சாமிர்தம் – தீர்க்காயுள்
- தேன் – சங்கீத ( இசை ) வன்மை
- நெய் – மோட்சம் ( முக்தி )
- பசும்பால் – ஆயுள் விருத்தி
- பசுந்தயிர் – சந்தான ( மக்கட்பேறு ) விருத்தி
- எலுமிச்சம்பழம் – யமபயம் நீங்கும்
- இளநீர் – நன்மக்கட் ( புத்திர ) பேறு
- கரும்புசாறு – சாஸ்திர தேர்ச்சி
- வாசனை திரவியம் – ஆயுள் வலிமை
- மஞ்சள் பொடி – ராஜ வசியம்
- நெல்லிமுள்ளிப்பொடி – நோய் நீக்கம் ; ஆயுள் ஆரோக்கியம்
- அன்னம் ( சாதம் ) – தேசம் அபிவிருத்தி
- அன்னாபிஷேகம்
- கஸ்தூரி – வெற்றி உண்டாகும்
- கோரோசனை – ஜபம் சித்திக்கும்
- விபூதி – ஞானம் உண்டாகும்
- பச்சைக் கற்பூரம் – பயம் நீங்கும்
- சந்தனம் – செல்வவளம் ; சொர்க்கபோகம்
- பன்னீர் – வாழ்வு வளமாகும்
- வலம்புரி சங்கு – தீவினை நீங்கும்
- சங்காபிஷேகம்
- தங்கம் – வைராக்கியம்
- சொர்ணாபிஷேகம்
- ஸஹஸ்ரதாரை – லாபம்
- கும்பம் – அஸ்வமேத யாக பலன்
- கலசாபிஷேகம்
- புஷ்பம் – மகிழ்ச்சி
தாங்கள் விருப்பப்படும் நன்கொடையை செலுத்தவும்.
Donation as to wish.
முதலாவதாக கோவிலுக்கு நீங்கள் சாமிக்கு அணிவிக்கக்கூடிய நெற்றி பட்டையை தானமாக வாங்கி கொடுத்தால், உங்களுடைய பதவி எந்த வகையிலும் பறிக்கப்படாமல் நீண்ட காலம் தக்க வைத்துக் கொள்ளலாம். பதவி பறிபோவதை தடுக்கவும், பதவி நிலைத்து நிற்கவும் நெற்றி பட்டையை கோவிலுக்கு தானம் செய்யுங்கள். கோவிலுக்கு கண்மலர் வாங்கிக் கொடுப்பதை நாம் பார்த்திருப்போம். எந்த வகையான கண் நோய்களையும் தீர்க்கக்கூடிய ஒரு தானம் கண்மலர் தானம்.
கண் சார்ந்த பிரச்சனைகள், பார்வை பிரச்சனைகள் இருப்பவர்கள் வேண்டுதல் வைத்து கண் மலரை சாற்றி வழிபடுதல் நல்லது. அபிஷேகம் செய்யக்கூடிய கலசம் அல்லது கும்பம் நீங்கள் எந்த உலோகத்தில் வாங்கி கொடுத்தாலும், உங்களுடைய செல்வமானது பரிபூரணமாக நிறையும் என்று நம்பப்படுகிறது. கும்பம் மட்டுமல்லாமல் சுவாமிக்கு அணிவிக்க கூடிய கிரீடம், ஆபரணங்கள் போன்றவற்றை தானமாக வழங்கினாலும் உங்களுடைய செல்வங்கள் பெருகும். அடுத்தடுத்த சந்ததியினருக்கு சொத்துக்கள் சேரும் என்பது ஐதீகம். குடும்பத்தில் பிரச்சனைகளும், நிம்மதி இன்மையும் அதிகரிக்கும் பொழுது நீங்கள் கோவிலுக்கு நெய் அல்லது நல்லெண்ணையை தானமாக கொடுத்துப் பாருங்கள், விரைவாக பிரச்சனைகள் தீர்ந்து குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் பெருக்கெடுக்கும். அவ்வளவு சக்தி வாய்ந்த ஒரு தானமாக இந்த தானம் கருதப்படுகிறது. விளக்கு தானம், குத்து விளக்கு தானம் செய்து கோவிலுக்கு அர்ப்பணித்தால் நீங்கள் எத்தகைய நோயிலிருந்தும் விடுபடலாம் என்கிறது சாஸ்திரங்கள் எனவே தீராத பிணிகள் தீர விளக்கு தானம் செய்யுங்கள்.
கோவில் கட்டுவதற்கும், கும்பாபிஷேகம் செய்வதற்கும், கோவில் கோபுரம் அமைப்பதற்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்தால் விரைவாகவே சொந்த வீடு கட்டி குடியேறும் யோகம் உங்களுக்கு நிச்சயம் வந்து சேரும். மனம் உவந்து நீங்கள் கோவில் கோபுரம் கட்டுவதில் பங்கெடுத்து பாருங்கள், வாடகை வீட்டில் கஷ்டப்பட வேண்டிய அவசியமே இல்லை, உங்களுக்கென ஒரு வீடு நிச்சயம் அமைந்துவிடும். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த ஒரு பரிகாரமாக இப்பரிகாரம் இருக்கும். கோவிலில் சுத்தம் செய்யக்கூடிய பொருட்கள் அல்லது நீங்கள் தண்ணீர் வரக்கூடிய பைப்புகள் அமைப்பது அல்லது டாங்குகள் பொருத்துவது போன்ற பணிகளை செய்து கொடுத்தால் குடும்பத்தில் செல்வ விருத்தி ஏற்படும், நகை சேரும். தொழிலில் முன்னேறவும், வருமானம் விருத்தியாகவும், பொருளாதார ஏற்றம் காணவும் நீங்கள் அஸ்திர தானம் செய்யலாம். ஒவ்வொரு கடவுளருக்கும் ஒவ்வொரு விதமான அஸ்திரங்கள் உண்டு. இந்த அஸ்திரங்கள் எனப்படும் ஆயுதங்களை நீங்கள் உங்களால் முடிந்த உலோகங்களில் தானம் செய்தால் பயம் நீங்கி, பகை ஒழிந்து, வருமானம் ஊற்றெடுக்கும். மாதத்தில் ஒரு நாள் நீங்கள் அபிஷேகம் செய்வதில் பங்கெடுத்தால், மாதம் முழுவதும் நீங்கள் வழிபாடு செய்த பலன் உங்களை வந்தடையும் என்கிறது சாஸ்திரங்கள். எனவே அபிஷேகத்தில் பங்கு கொள்ளுங்கள். அது மட்டும் அல்லாமல் யாகங்கள் வளர்ப்பதிலும் நீங்கள் உதவி செய்தால் ஏழேழு பிறவிக்கும் நீங்கள் துன்பப்படாமல் இன்பத்தை அடையலாம்.